என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கனமழை எச்சரிக்கை"
- நாளை காலை வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இரு மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- கனமழையால் பாதிக்கப்பட்ட கொட்டாரம் பகுதியில் ஆட்சியர் அழகு மீனா ஆய்வு மேற்கொண்டார்.
தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்தது.
இந்நிலையில், கன்னியாகுமரி , நெல்லையில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை காலை வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இரு மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கன்னியாகுமரியில் வெளுத்து வாங்கும் கனமழையால், கொட்டாரம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மழை நீர் சூழ்ந்துள்ளது.
கடந்த 4 மணி நேரத்தில் மட்டும் கொட்டாரம் பகுதியில் 16 செ.மீ.க்கு மேல் மழை பெய்துள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட கொட்டாரம் பகுதியில் ஆட்சியர் அழகு மீனா ஆய்வு மேற்கொண்டார்.
மழை நீர் புகுந்த வீடுகளை ஆய்வு செய்து உடனடியாக நீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- தெற்கு வங்கக்கடலில் நவம்பர் முதல் வாரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது.
- நவம்பர் 2வது வாரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.
தமிழகத்தில் வரும் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெற்கு வங்கக்கடலில் நவம்பர் முதல் வாரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது.
காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு பகுதியாக மாறி, நவம்பர் 2வது வாரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வரும் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை, அதாவது 5 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
- பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
தொடர்ந்து, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டார்.
இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக விழுப்புரம் கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இதன்மூலம், இதுவரை 8 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மீட்பு பணிக்கு தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- மாவட்ட அளவில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் 15ம் தேதி வரை கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால், அதிகனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, முன்னெச்சரிக்கையை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது
பேரிடர்களை கையாளுவதற்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கன முதல் மிக கனமழை பெய்யும் பட்சத்தில் அனைத்து மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு பணிக்கு தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு, வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி கடிதம் எழுதியுள்ளார்.
- அனைத்து பள்ளி-கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை.
- பள்ளிகளில் நிவாரண முகாம்கள் செயல்பட்டு வருகின்றன.
திருவனந்தபுரம்:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அங்கு பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
வயநாட்டில் கனமழை கொட்டியதால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டு 300-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டனர்.
இந்நிலையில கேரள மாநிலத்தில் வருகிற 5-ந்தேதி கரை கமனழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று வயநாடு, கோழிக்கோடு, காசர்கோடு, கண்ணூர், மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று பலத்தமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட டுள்ளதால் அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகள் உளிட்ட அனைத்து கல்வி நிலையங்கள் மற்றும் டியூசன் மையங்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டிருந்தது.
அதேபோல் பாலக்காடு மாவட்டத்திலும் அனைத்து பள்ளிகள், அங்கன்வாடி கள், டியூசன் மையங்களுக்கு மாவட்ட கலெக்டர் இன்று விடுமுறை அறிவித்தார்.
இடுக்கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் ஏராளமான பள்ளிகளில் நிவாரண முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.
- தென்மேற்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது.
- வட மாநிலங்களில் கன மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. வட மாநிலங்களில் கன மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் பலத்த மழை பெய்து வருவதால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்றும் நாளையும் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும்.
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை லேசான மழை பெய்யும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்ப நிலை 31 முதல் 32 டிகிரி செல்சியசை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்ப நிலை 26 முதல் 27 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளது.
- தமிழ்நாட்டில் இன்று கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென் மேற்கு பருவ மழையானது கேரளாவை தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் பெய்து வருகிறது.
நீலகிரி, கோவை, மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 12-20 செ.மீ மழை பொழிய வாய்ப்பு உள்ளதால், 2-வது நாளாக இன்றும் ஆரஞ்சு எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று இரவு திடீரென மழை பெய்தது. அதனை தொடர்ந்து இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.
- கனமழை வருகிற 26-ந்தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாவட்டங்களுக்கு சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கட்டிருக்கிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கடந்த மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியது. அதில் இருந்தே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. சில மாவட்டங்களில் மட்டும் பலத்த மழை பெய்தது.
இந்நிலையில் மேற்கு பசிபிக் பெருங்கடலில் உருவாக புயல் வலுப்பெற்றதன் காரணமாக கேரள மாநிலத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்தது.
இந்த கனமழை வருகிற 26-ந்தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்யும் மாவட்டங்களுக்கு சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கட்டிருக்கிறது.
கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், மலப்புரம், பாலக்காடு மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா ஆகிய மாவட்டங்கக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 204 மில்லிமீட்டருக்கு அதிகமாக மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து 9 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் கேரளாவுக்கு வந்துள்ளது. அந்த குழுக்கள் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தயார் நிலையில் இருக்கிறது.
அது மட்டுமின்றி கடலில் அதிக அலைகள் எழ வாய்ப்பு இருப்பதால் கடலோர மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கு மாறும், மீனவர்கள் தங்களின் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
- தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
- கோவை, திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வருகிற 25-ந்தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும் திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, தேனி, நெல்லை, குமரி ஆகிய 6 மாவட்டங்களில் ஜூன் 22, 23, 24 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
- சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இரவு நேரங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளது.
- வருகிற ஞாயிற்றுக்கிழமை திருப்பூா், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் 'மஞ்சள்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னை:
தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வருகிற 25-ந்தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இரவு நேரங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் (சனிக்கிழமை) திருப்பூா், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களிலும், வருகிற 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருப்பூா், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் 'மஞ்சள்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
22, 23-ந்தேதிகளில் நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
- சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் சுட்டெரிக்கும்.
- குமரிக்கடல், கடலோரப்பகுதிகளில் 3ம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெரும்பாலான பகுதிகளிலும், தென் தமிழகத்தில் சில பகுதிகளிலும் இன்று தொடங்கியுள்ளது.
இதன் எதிரொலியால், தமிழகத்தில் வரும் 1, 2, 3ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் 1ம் தேதி மற்றும் 2ம் தேதிகளில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, 3ம் தேதி திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல், கடலோரப்பகுதிகளில் 3ம் தேதி வரை 55 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும், அதுவரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
- இருளஞ்சந்தை, குருவிநத்தம், கரிக்கலாம்பாக்கம் மற்றும் அதனையொட்டிய தமிழக பகுதியிலும் அறுவடை பணிகள் மும்முரமாக நடக்கிறது.
- நெற்பயிர்கள் பசுமையாக பூ வைத்த நிலையில் உள்ள கதிர்களில் அண்மையில் பெய்த மழையால் பூச்சிகள் பாதிப்பு அதிகமாகும்.
புதுச்சேரி:
புதுவையின் நெற்களஞ்சியமான பாகூர் பகுதியில் தாளடி நவரை பருவத்தில் சுமார் ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
ஏ.டி.டி-51, என்.எல்.ஆர். ரக நெற்பயிர்களை அதிகளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
பயிர்களில் கதிர்பிடித்து தற்போது நெல்மணிகள் வளர்ந்துள்ளன. அடுத்த ஒருவாரத்தில் அறுவடை செய்ய விவசாயிகள் முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் பாகூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.
23-ந் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அவ்வாறு பலத்த மழை பெய்தால் விளைந்த நெற்பயிர்கள் மடிந்து சேதமடையும்.
எனவே அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் மற்றும் சற்று பசுமையாக உள்ள நெற்பயிர்களை விவசாயிகள் முன்கூட்டியே அறுவடை செய்து வருகின்றனர். இருளஞ்சந்தை, குருவிநத்தம், கரிக்கலாம்பாக்கம் மற்றும் அதனையொட்டிய தமிழக பகுதியிலும் அறுவடை பணிகள் மும்முரமாக நடக்கிறது.
இதுகுறித்து பாகூர் பகுதி விவசாயிகளிடம் கேட்டபோது, மழை பெய்து வருவதால் முன்கூட்டியே அறுவடை செய்தால் ஓரளவாது நஷ்டம் ஏற்படாமல் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில் முன்கூட்டியே அறுவடை நடந்து வருகிறது.
ஏற்கனவே பெய்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக இருப்பதால், செயின் போட்ட அறுவடை எந்திரம் மூலம் பணிகள் நடக்கிறது.
நெற்பயிர்கள் பசுமையாக பூ வைத்த நிலையில் உள்ள கதிர்களில் அண்மையில் பெய்த மழையால் பூச்சிகள் பாதிப்பு அதிகமாகும். இதனால் மகசூல் பாதிக்க வாய்ப்புள்ளதாக கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்